
இந்தியா-இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதைக் கண்டித்து தங்கச்சி மடத்தில் 2ஆவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்திய மீனவரை சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்தியா-இலங்கை இடையில் உயர்மட்ட அளவில் நடத்தப்பட்ட ஆலோசனையில் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இருநாட்டு அரசுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை சிறைகளில் இந்திய மீனவர்கள் 85 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.