துளிர்க்கும் நம்பிக்கை: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி மரியாதை செய்த பொதுமக்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி மரியாதை செய்த பொதுமக்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி மரியாதை செய்த பொதுமக்கள்
Published on

போரூரில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் வழங்கினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் தங்களது பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டும் விதமாக போரூர், மங்களா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11 வது மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களை வரவழைத்தனர்.

பின்னர் அவர்களுக்கு மலர் தூவி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை வழங்கினார்கள். இதில் மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com