ஊரடங்கை மீறி கோயில் திருவிழாவில் நடந்த விளையாட்டுப் போட்டி: வைரலாகும் வீடியோ

ஊரடங்கை மீறி கோயில் திருவிழாவில் நடந்த விளையாட்டுப் போட்டி: வைரலாகும் வீடியோ

ஊரடங்கை மீறி கோயில் திருவிழாவில் நடந்த விளையாட்டுப் போட்டி: வைரலாகும் வீடியோ
Published on

விளாத்திகுளம் அருகே கொரோனா ஊரடங்கை மீறி கோயில் திருவிழா,விளையாட்டு போட்டிகளையும் மக்கள் நடத்தினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை அப்பகுதி மக்கள் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் திருவிழாவினை முன்னிட்டு இரவில் கபடி போட்டி, பகலில் கயிறும் இழுக்கும் போட்டிகள் என விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர். இதில், அதிகளவிலான மக்கள் தனிமனித இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியமாலும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com