மாறன் குடும்பத்தில் பிளவு?|கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்! என்ன விவரம்?
இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்களான சகோதரர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிகன்ட்ரோல்.காம் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, சன் டிவி பங்குகளை கையாளுவதில் 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாறன் குடும்பத்தில் பிளவு.. என்ன விவரம்?
மணி கண்ட்ரோல் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, முரசொலி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன் குழுமத்திற்குள் பூசல் வெடித்துள்ளது. சன் டிவி பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் என சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி உள்பட 8 பேருக்கு தயாநிதி மாறன் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கலாநிதி மாறனின் சன் டிவி சட்ட விரோத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக தயாநிதி மாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளதாகவும், சன் டிவி பங்குகளை கையாளுவதில் 2003ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மாறன் சகோதரர்கள் இடையே நிலவும் பிளவை காட்டுவதாகவும், கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பும் 2வது நோட்டீஸ் இது எனவும் மணி கன்ட்ரோல்.காம் குறிப்பிட்டுள்ளது.