\
மதுரை
மதுரைமுகநூல்

மதுரை | புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட்... சேதமடைந்திருந்த முன்பக்க கண்ணாடி! என்ன நடந்தது?

மதுரையில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்ததால் பரபரப்பு நிலவியது.
Published on

நேற்று காலை துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், பிற்பகல் 12.50 மணிக்கு மீண்டும் துபாய்க்கு புறப்பட இருந்தது. அதில் பயணிக்க 146 பயணிகள் தயாராக இருந்தனர்.

பயணத்தைத் தொடங்கும் முன்பு, விமானத்தை இயக்க இருந்த விமானிகள் ஆய்வு செய்தபோது, விமானிகள் அறையின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிய விமானிகள், கண்ணாடி சேதமடைந்திருந்தது பற்றி, ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பயணம் ரத்து செய்யப்பட்டு, சேதமுற்ற கண்ணாடியை மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று விமானத்தில் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரை
2 மாதங்களுக்குப் பிறகு... அரை சதவீதம் அதிகரித்த இந்தியாவின் ஏற்றுமதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com