\
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் - வெளியானது சிசிடிவி காட்சிகள் 

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் - வெளியானது சிசிடிவி காட்சிகள் 

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் - வெளியானது சிசிடிவி காட்சிகள் 
Published on

அவினாசி அடுத்த சூளை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற நந்தினி என்பவரை பின்னால் வந்த கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

அவினாசி அடுத்த சூளை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற நந்தினி என்பவரை பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் நந்தினி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மூளைச்சாவு அடைந்தார். இதனால் நந்தினியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி மாலை தனது குழந்தையை வீட்டருகே உள்ள பூங்காவில் விளையாட வைப்பதற்காக நந்தினி சென்றுள்ளார். சாலையின் ஓரமாக நடந்து சென்ற நந்தினியை பின்புறமாக அதிவேகத்தில் வந்த ஆள்டோ கார் மோதியுள்ளது. 

நந்தினிக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கார் மோதியதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக நந்தினியின் கணவர் மகேஷ் அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com