புத்தாண்டு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு வழிபாடு
புத்தாண்டு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு தினத்தன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் காலை முதலே மக்கள் பங்கேற்றனர்.

புத்தாண்டு தினத்தில் பொதுமக்கள் காலை முதலே குடும்பத்துடன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் காலை 3 மணிக்கு சிறப்பு மார்கழி பூஜை தொடங்கியது. பின்னர் பெருமாளுக்கு ரத்ன அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். காலை 5 மணி முதல் பொதுமக்கள் சிறப்பு தரிசனம் வழிபடு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இன்றைய தினம் நண்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கான சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொரோனா நீக்கி மக்கள் விடுபட வேண்டும் என்று மக்கள் வழிபட்டனர். அதேபோல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்தில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் முககவசம் கட்டாயம், தனி மனித இடைவெளி கடைபிடிக்க கட்டாயமாக்கப்பட்டது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com