ஹோலி பண்டிகையையொட்டி 28 சிறப்பு ரயில்கள்!

ஹோலி பண்டிகையையொட்டி, நெல்லை முதல் சென்னை வழித்தடம் உட்பட 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகைமுகநூல்

ஹோலி பண்டிகையையொட்டி, நெல்லை முதல் சென்னை வழித்தடம் உட்பட 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது தென்னக ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாராந்திர விடுமுறையும் சேர்த்து வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 31ஆம் தேதி வரை 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளையும், 31ஆம் தேதியும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இரண்டு சிறப்பு ரயில்களும், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்களும், நெல்லையிலிருந்து சென்னைக்கும், அதேபோல் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், கண்ணூரில் இருந்து பெங்களூரு, கோயம்புத்தூரில் இருந்து பாட்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் 28 சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹோலி பண்டிகை
தென்காசி ஓட்டுநர் முருகன் மரணம் | “காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - நீதிபதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com