தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேமுகநூல்

கோடை விடுமுறை| வெளி மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

கோடை விடுமுறைக்காக மாநிலங்களிடையே இயக்கப்படும் ரயில் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

கோடை விடுமுறையை ஒட்டி அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவையை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் சேவை நீட்டிப்பு..

தெற்கு ரயில்வேவின் புதிய அறிவிப்பின் படி தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை மே 12ஆம் தேதி முதல் ஜூன் 2 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மதுரையில் இருந்து காச்சிகுடா செல்லும் சிறப்பு ரயில் மே 14ஆம் தேதியில் இருந்து ஜூன் 4ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில் மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி
வரையும், ராமேஸ்வரத்தில் இருந்து செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரயில் மே 9ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com