தமிழ்நாடு
அத்திவரதர் திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
அத்திவரதர் திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் திருவிழாவைக் காண பக்தர்களின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை முதல் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதல் ரயிலானது தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு மற்றொரு ரயில் இயக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5.30மணி வரை செங்கல்பட்டில் இருந்து 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கமாக காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.