\
தமிழக எல்லையில் நக்சல் ஊடுருவலா?

தமிழக எல்லையில் நக்சல் ஊடுருவலா?

தமிழக எல்லையில் நக்சல் ஊடுருவலா?
Published on

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தொட்டிக்கிணறு வனப் பகுதியில் ஆயுதங்களோடு நக்சல்கள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தொட்டிக்கிணறு வனப்பகுதியில், ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் மிரட்டியதாக கார் டிரைவர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தமிழக ஆந்திர நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார், அதிரடிப்படையினர் என 30 பேர் கொண்ட குழு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 

தொட்டிக்கிணறு வனப்பகுதிக்கு செல்லும் பாதைகளிலும் இரு மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. வனப்பகுதியில் ஆடு மேய்த்தவர்களிடம், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்ததா என காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். தொட்டிக்கிணறு வனப்பகுதியில் சுமார் 60 நக்சலைட்டுகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த அதிரடி சோதனையை தமிழக ஆந்திர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com