\
மன்னார் வளைகுடா பவளப் பாறைகளை கண்டுகளிக்க புதிய திட்டம்

மன்னார் வளைகுடா பவளப் பாறைகளை கண்டுகளிக்க புதிய திட்டம்

மன்னார் வளைகுடா பவளப் பாறைகளை கண்டுகளிக்க புதிய திட்டம்
Published on: 

கண்ணாடி இழை பொருத்தப்பட்ட படகுகள் மூலம் பவளப்பாறைகளை ரசிக்கும் திட்டத்திற்கு மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம் திட்ட‌மிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையிலிருந்து வான் தீவு உள்ளிட்ட மன்னார் வளைகுடா தீவுகள் அருகருகே அமைந்திருப்பதால் இப்பகுதி கடற்பரப்பில் அதிகளவு பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இந்த‌ப் பவளப்பாறைகளை காக்கும் வகையிலும், அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலும் தருவைக்குளத்தில் சுற்றுலா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது.

இதன்படி, சுற்றுலாப் பயணிகள் பவளப் பாறைகளை கண்டு ரசிக்கும் வண்ணம் கண்ணாடி இழை படகில் அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீருக்குள் பவளப் பாறைகளை கண்டு ரசிக்க ஏதுவாக‌ ஸ்கூபா டைவிங்,‌ ஸ்நோர்கிளிங் டைவிங்‌ போன்ற வசதிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாக மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்‌.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com