\
ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை
Published on

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. 

குருஸ்தலம் என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அத‌ன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு காலை 9.31 மணிக்கு பிரவேசம் செய்தார். அதையொட்டி குருபகவானுக்கு யாகசாலை‌ பூஜை மற்றும் சிறப்பு‌ அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com