வறட்சியில் தவிக்கும் தமிழக மக்கள்: மழை வேண்டி சிறப்பு யாகம்

வறட்சியில் தவிக்கும் தமிழக மக்கள்: மழை வேண்டி சிறப்பு யாகம்
வறட்சியில் தவிக்கும் தமிழக மக்கள்: மழை வேண்டி சிறப்பு யாகம்

தமிழகத்தில் வறட்சிநிலவி வரும் நிலையில் மழை வேண்டி ஆலயங்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

தண்ணீருக்கான தட்டுப்பாடும் அது தொடர்பான பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியின் கரணமாக விவசாய‌ம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழனி பெரியநாயகிம்மன் கோவிலில் மழை வேண்டி வருணஜபம் நடத்தப்பட்டது. 20 அர்ச்சகர்கள் நீரில் முழகியபடி வேதமந்திரங்கள் ஓதி மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர். அதேபோல் நாகை மாவட்டம் நீலாயதாட்சியம்மன் கோவிலில் விவசாயம் செழிக்கவும், முப்போகம் விளையவும் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com