திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு பரவிய கொரோனா - ராதாகிருஷ்ணன்
சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயுபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். உணவு மற்றும் காய்கறிகள் டெலிவரி செய்யும் நபர்கள், தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. தன்னார்வலர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.