தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு சிறப்பு குடிநீர் திட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு சிறப்பு குடிநீர் திட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகருக்கு சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார். முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரை மாநகருக்கு சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் தெரிவித்தார். முன்னதாக மதுரையில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்கள் மற்றும் புதிய திட்டங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அரசு சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.