வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்புக் குழு

வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்புக் குழு

வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்புக் குழு
Published on

சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 20 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலைப் பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த மலைப் பாதையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட பக்தர்களுக்கு கடந்த 6 ஆம் தேதி முதல் வனத்துறையினர் அனுமதியை வழங்கி உள்ளனர். நாளை சிவராத்திரி என்பதால் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால், மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பக்தர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மலையேற்றத்தின் போது பக்தர்கள் எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வருவது, பூண்டி சாலையில் இரவு நேரத்தில் நடந்து கோயிகளுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com