\
இன்றும், நாளையும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

இன்றும், நாளையும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

இன்றும், நாளையும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்
Published on

தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு இடங்களில் பெயர் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகளும் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், முகவரி சான்று, வயது சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்பித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com