தமிழ்நாடு
பெயர் சேர்க்க, நீக்க இன்று ரேஷன் அட்டைதாரருக்கான சிறப்பு முகாம்
பெயர் சேர்க்க, நீக்க இன்று ரேஷன் அட்டைதாரருக்கான சிறப்பு முகாம்
ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க முகவரி மாற்ற உள்ளிட்ட சேவைகளுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் இன்று ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கான முகாம் நடைபெற உள்ளது. சென்னையை பொறுத்தவரை மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், புதிய அட்டை கோரி விண்ணப்பம் ஆகிய சேவைகளை இந்த முகாம்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் பெறுவது தொடர்பான குறைகளை இம்முகாமில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.