ஊருக்கு போக ரெடியா மக்களே!? போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு புது யோசனை!

ஊருக்கு போக ரெடியா மக்களே!? போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு புது யோசனை!
ஊருக்கு போக ரெடியா மக்களே!? போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு புது யோசனை!

தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், மாதவரம், பூந்தமல்லி என 5 மையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இன்று முதல் 3 நாளைக்கு 10,518 பேருந்துகள் வரும் 23 வரை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று வரை 1,00,051 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் முன்பதிவு செய்து இருக்கின்றனர். நடை மேடைகளில் விசாரணை மையம் அமைப்பது, தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகள் பாதுகாப்புக்காக இருக்க சி.சி.டி.வி கேமிரா வைக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் இருந்து 3,537 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகளின் அனைத்து இருக்கைகள் நிரம்பினால் நசரத்பேட்டை வழியாக சென்று ஊரப்பாக்கம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com