திருப்பதிபுதிய தலைமுறை
தமிழ்நாடு
திருப்பதி பிரம்மோற்சவம் | தமிழகத்திலிருந்து பக்தர்கள் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி, தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்..
பிரம்மோற்சவத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பயணித்து வருகின்றனர். இதனால், பயணியர் வசதிக்காக தமிழகத்தில் இருந்து அக்டோபர் 6ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருப்பதிமுகநூல்
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வழக்கமாக செல்லும், 60 விரைவு பேருந்துகளோடு, கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.