தசரா பண்டிக்கைக்கு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்web
தமிழ்நாடு
தசரா பண்டிகை| சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தசரா பண்டிகையை முன்னிட்டு திருச்செந்துார், குலசேகரன்பட்டினத்துக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்துார் மற்றும் குலசேகரன்பட்டினத்துக்கு, 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அக்டோபர் 3ஆம் தேதி வரை, சென்னை, கோவையில் இருந்து திருச்செந்துார் மற்றும் குலசைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை முடிந்து பக்தர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, அக்டோபர் 1முதல் 3ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க டி.என்.எஸ்.டி. சி. இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்..