\
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது
Published on

சென்னை வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வாசு என்பவர் பணிபுரிகிறார். வில்லிவாக்கத்தில் வசிக்கும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது. 

இதை அறிந்த அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் காவல் அதிகாரி வாசுவை அடித்து உதைத்து வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் காவல் அதிகாரி வாசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com