வாணியம்பாடி: “வாக்காள பெருமக்களே வருக! வருக!” – வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு!

வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வாக்காளிக்க வரும் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடு
சிறப்பு ஏற்பாடுpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை (19.04.2024) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

சிறப்பு ஏற்பாடு
சிறப்பு ஏற்பாடுjpt desk

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 121, 122 ஆகிய வாக்குச் சாவடி மையங்கள் வாணியம்பாடி காந்தி நகர் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை வரவேற்று வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு
மக்களவை தேர்தல் 2024 | நிதின் கட்கரி முதல் எல்.முருகன் வரை... களம் காணும் மத்திய அமைச்சர்கள் லிஸ்ட்!

மேலும் கோடை வெயிலில் வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வாக்காளர்கள் அமர்வதற்கான சிறப்பு நாற்காலிகளும் அலங்கார தோரணங்களும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு
சிறப்பு ஏற்பாடுpt desk

மேலும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களை வரவேற்று சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

சிறப்பு ஏற்பாடு
தொடர்ந்து குறையும் வாக்குப்பதிவு... ஜனநாயக கடமையாற்ற தவறும் நகரத்து மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com