\
குஞ்சு இறந்தது தெரியாமல் உணவளித்த தாய்க் குருவி

குஞ்சு இறந்தது தெரியாமல் உணவளித்த தாய்க் குருவி

குஞ்சு இறந்தது தெரியாமல் உணவளித்த தாய்க் குருவி
Published on

குஞ்சு இறந்தது கூட தெரியாமல் அதற்கு தாய் சிட்டுக்குருவி உணவு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக் குருவிகளை பராமரித்து வருகிறார். அங்கு குருவிக் குஞ்சு ஒன்று இறந்துள்ளது. இதனை அறியாத அதன் தாய்க்குருவி, அதற்கு இரை அளிக்க முயன்றது. 

இந்த சம்பவம் செல்வராஜ் மற்றும் பார்ப்பவர் அனைவரின் மனதிலும் வருத்தத்துடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து குருவிக் குஞ்சு இறந்தது தெரிந்ததையடுத்து அந்த தாய்க் குருவி சோகத்தில் மூழ்கியது. பின்னர் இறந்துபோன சிட்டுக்குருவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி செல்வராஜ் அடக்கம் செய்தார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com