விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை

விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை

விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வான உதயகீர்த்திகா : துணை முதல்வரிடம் கோரிக்கை
Published on

விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த உதயகீர்த்திகா, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தமிழகத்தை சேர்ந்தார் உதயகீர்த்திகா விண்வெளி ஆய்வில் ஆர்வம் உடையவர். இவர் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ளார். இந்த பயிற்சிக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. 

ஆனால் அந்த அளவு பணம் இல்லாததால் தமிழக அரசிடம் உதவி கேட்க உதயகீர்த்திகாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை குடும்பத்துடன் சந்தித்த உதயகீர்த்திகா தமிழ‌க அரசு உதவவேண்டும் என மனு அளித்துள்ளார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com