“சட்டம் ஒழுங்கு சரியில்லை; கவர்னர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள்” - எஸ்.பி.வேலுமணி

“ ‘கூட்டணி தேவை என்றால் நம்மை தேடிதான் வரணும், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எடப்பாடியர் கூறியுள்ளார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேசினார்.
sp velumani
sp velumanipt desk

கோவையில் உள்ள அதிமுக இதய தெய்வம் மாளிகையில் அக்கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “பாஜக உடன் கூட்டணி இல்லை என பொதுச் செயலாளர் அறிவித்ததை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

admk
admkpt desk

எடப்பாடியார் எந்த முடிவு எடுத்தாலும் தெளிவாக எடுப்பார். சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது அதிமுகவின் கொள்கை. தற்போதுள்ள திமுக எம்.பி-க்கள் பென்ச்-ஐ தேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அதிக தொண்டர்களை கொண்டுள்ள கட்சி அதிமுகதான்.

‘கூட்டணி தேவை என்றால் நம்மை தேடி தான் வரணும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எடப்பாடியர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது பாருங்கள், கவர்னர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள்” எனக்கூறி விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com