தொடரும் முன்னிலை.. தர்மபுரி தொகுதியில் பாமகவின் சௌமியா அன்புமணி சாதித்தது எப்படி?

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் மணியைவிட முன்னிலை பெற்று வருகிறார் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி.., அவர் அந்தத் தொகுதியில் சாதித்தது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்..
சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிpt web

தர்மபுரி தொகுதியைப் பொறுத்துவரை பாமகவுக்கு மிகவும் செல்வாக்கு உள்ள தொகுதி... அந்தத் தொகுதியில் நடந்துள்ள 12 தேர்தலில், நான்கு முறை வெற்றிபெற்று அதிகமுறை வெற்றிபெற்ற கட்சியாக பாமகவே இருந்துவருகிறது.., 1998,1999, 2014 ஆகிய மூன்று தேர்தல்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலும், 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளது..

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

தவிர தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் பென்னகரம், தர்மபுரி, மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாமகவே 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது... பாமகவுக்கு அந்தத் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் என்பது வாக்குவங்கியாக இருக்கிறது.., அதுமட்டுமல்ல, இந்தத் தேர்தலில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் பிரசார வியூகம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது..,

சௌமியா அன்புமணி
மக்களவை தேர்தல் 2024: பிறந்தநாள் காணும் அண்ணாமலைக்கு பரிசளிக்குமா கோவை?

சௌமியா அன்புமணி செல்ல முடியாத இடங்களில், அவரின் மகள்கள், சம்யுக்தா, சஞ்சுத்ரா மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.., ஒவ்வொரு வீடாகச் சென்று அவர் செய்த பிரசாரம், மக்களிடம் மிக எளிமையாகப் பழகிய விதம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.., குறிப்பாக பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் மேற்கொண்ட பிரசாரம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளது..,

அதிமுக பாமக, பாஜக வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடாததால், பெரும்பான்மையாக திமுகவுக்குச் செல்லவேண்டிய வாக்குகள் அதிமுகவுக்கும் பிரிந்திருப்பதால் சவுமியா அன்பும்ணியின் முன்னிலை சாத்தியமாகியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..,

சௌமியா அன்புமணி
”மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” - சூரத்தில் பாஜக வெற்றி குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் விளாசல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com