கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணை: பருந்துப் பார்வை காட்சி

கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணை: பருந்துப் பார்வை காட்சி

கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணை: பருந்துப் பார்வை காட்சி
Published on

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சில தினங்களிலேயே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது வைகை அணை. அதன் எழில்மிகு காட்சியை பருந்துப்பார்வையில் பதிவு செய்துள்ளது புதிய தலைமுறை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மொத்த பரப்பளவு 15 சதுர கிலோ மீட்டர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் வைகை அணை தான். சுருளி மலை, குமுளி மலை, மேகமலை, வெள்ளி மலை, சதுரகிரிமலை, வருசநாடு மலை, குரங்கணி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் மூல வைகையாறு, கொட்டக்குடி ஆறுகள் மூலமும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்ப்பில் இருந்து முல்லைப்பெரியாற்றின் மூலமும் வைகை அணையை வந்தடைகிறது.

கடந்த ஜனவரியில் எதிர்பாராமல் கிடைத்த வடகிழக்கு பருவமழை, கடந்த மாதம் கிடைத்த கோடை மழை, சில தினங்களுக்கு முன்பு பெய்யத் தொடங்கிய தென்கிழக்கு பருவமழை ஆகியவற்றால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 67.70 அடியாக உள்ளது. முழு கொள்ளவை எட்ட இன்னும் சில அடிகளே உள்ள நிலையில் அணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல் காணப்படுகிறது. பருந்துப்பார்வையில் பார்க்கும் போது பேரழகுடன் காட்சி அளிக்கிறது வைகை அணை. வைகை அணையின் பருந்துப்பார்வை காட்சியை வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com