ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி!
தெற்கு ரயில்வே, ஏசி வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் கட்டண அடிப்படையில் தலையணை, பெட்ஷீட் வழங்கும் திட்டத்தை ஜனவரி 1 முதல் தொடங்குகிறது. தலையணைக்கு ரூ.30, பெட்ஷீட்டுக்கு ரூ.20 வசூலிக்கப்படும். முதற்கட்டமாக சென்னை கோட்டத்தின் 10 ரயில்களில் மூன்று ஆண்டுகள் சேவை அமலும், ஆண்டுக்கு 28.27 லட்சம் ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்களில் குளிர்சாதன வசதி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெட்ஷீட், தலையணை கிடைக்கும் வசதியை உறுதிப்படுத்தியுள்ளது தெற்கு ரயில்வே.. ரூ.50 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..
குளிர்சாதன வசதி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்பயணிகளும் இனி கட்டணம் செலுத்தி பெட் ஷீட், தலையணை பெற முடியுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல், 30 ரூபாய் செலுத்தி தலையணையும், 20 ரூபாய் செலுத்தி பெட் ஷீட்டும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னை கோட்டத்தால் பராமரிக்கப்படும் பத்து ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 28 லட்சத்து 27 ஆயிரத்து 653ரூபாய் உரிமக் கட்டணமாகக் கிடைக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

