தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே!

மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேPT

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19ம் தேதி கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக, தாம்பரம் - கன்னியாகுமரி - எழும்பூர் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் சேவைகள் மாற்றம்
ரயில் சேவைகள் மாற்றம் முகநூல்

அதன்படி ஏப்ரல் 18, 20 ஆகிய தேதிகளில் தாம்பரம் - கன்யாகுமரி அதிவேக சிறப்பு ரயில் மாலை 4.45-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.40-க்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

தெற்கு ரயில்வே
அதிவேக கார் மோதி ஒருவர் மரணம்; சடலத்துடன் 18 கிமீ பயணம்செய்த ஓட்டுநர்! ஆந்திராவில் அதிர்ச்சி விபத்து

மறு மாற்றமாக ஏப்ரல் 19 & 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் இரவு 8.30-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 க்கு தாம்பரத்தை அடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு - விழுப்புரம் வழியாக நாகர்கோவிலை சென்றடையும் ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டிகளும் 19 பொது பெட்டிகளும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேபுதியதலைமுறை

இதே போல் ஏப்ரல் 18 & 20 தேதிகளில் சென்னை எழும்பூர் கோவை சிறப்பு ரயில் மாலை 4.25-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவையை சென்றடையும்.

மறு மார்க்கமாக ஏப்ரல் 19 & 21 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 8.40-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05-க்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com