யில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி
யில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிமுகநூல்

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 12 ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய ரயில்வே வாரியத்திடமே, தெற்கு ரயில்வே சரண்டர் செய்ததாக செய்திகள் வெளியாகின. இது, மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மத்​திய பட்​ஜெட்டில் தமிழகத்​தில் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்படி, தெற்கு ரயில்​வே​யில் தமிழகம், கேரளத்​தில் நடை​பெறும் 12 திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்​வேறு காரணங்​களை முன்​வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்​பி​யுள்​ளது என்று செய்திகள் வெளியானது.

யில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி
ஓடும் ரயிலில் பெண் செய்த வேலை.. 'தேவையா இது?'

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி, கூடுதல் நிதி தேவைப்படும் பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது என்றும், தெற்கு ரயில்வேயில் நிதிப் பற்றாக்குறை இல்லை தேவைக்கேற்ப திட்டங்களுக்கு அதிகபட்ச நிதியை பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com