தமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே!

தமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே!

தமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே!
Published on

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, தகவல் தொடர்பு மொழியாக தமிழைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை தென்னக ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப் பதை தவிர்க்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல் லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தென்னக ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை, புதிய சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தனது சுற்றறிக்கையில் மாற்றம் செய்துள்ளது தென்னக ரயில்வே. அதன்படி குழப்பம் ஏற்படாத வகையில் புரியும் மொழியில் பேசலாம் என்று தெற்கு ரயில்வே புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com