`எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில்’- தெற்கு ரயில்வே அறிவிப்பு

`எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில்’- தெற்கு ரயில்வே அறிவிப்பு
`எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில்’- தெற்கு ரயில்வே அறிவிப்பு

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் ஜூன் 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இந்த வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது.

இந்த ரயில், எர்ணாகுளத்திலிருந்து மதியம் 12.35க்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5.50க்கு வேளாங்கண்ணியை சென்றடையும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையே இந்த ரயில் கோட்டயம், செங்கனூர், மாவேலிக்கரா, கொல்லம், புனலூர், செங்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகையில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தற்போது நாகை வரை இயக்கப்படும் இந்த ரயில், இனி வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com