வைகை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேர அட்டவணையில் நாளை முதல் (அக்.1) மாற்றம் செய்யப்பட்டுள்ளாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் செய்யப்பட்டிருக்கும் நேர மாற்றம் குறித்து இங்கு பார்ப்போம்.
ரயில்கள்
ரயில்கள்புதிய தலைமுறை

வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேர அட்டவணையில் நாளை முதல் (அக்.1) மாற்றம் செய்யப்பட்டுள்ளாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் செய்யப்பட்டிருக்கும் நேர மாற்றம் குறித்து இங்கு பார்ப்போம்.

மதுரை - சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ்(12636) காலை 7.10 மணிக்கு பதிலாக 6.40-க்கு புறப்பட்டு பிற்பகல் 2:10 மணிக்கு சென்னை சென்றடையும்

சென்னை - மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ்(12635) வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு பதிலாக 9.30க்கு மதுரை சென்றடையும்

செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ்(12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்கு பதிலாக 09.45க்கு புறப்படும்

சென்னை - செங்கோட்டை இடையேயான பொதிகை எக்ஸ்பிரஸ்(12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு பதிலாக 04.30க்கு புறப்படும்

மதுரை - சென்னை இடையேயான பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக 09.20க்கு புறப்படும்.

மதுரை - கோவை இடையேயான கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்(16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக 07.00 மணிக்கு புறப்படும்.

மதுரை - விழுப்புரம் இடையேயான விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்கு பதிலாக 03.35 மணிக்கு புறப்படும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com