கிளாம்பாக்கம் ரயில்நிலையம் எப்போது வரும்...? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பதில்!

கிளாம்பாக்கத்தில் ரயில்நிலையம் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர். என்.சிங் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் ரயில்நிலையம்
கிளாம்பாக்கம் ரயில்நிலையம்புதிய தலைமுறை

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விளக்கமளித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், "ஆறு மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில்நிலையம் கட்டிமுடிக்கப்படும். மாநில அரசும், ரயில்வேயும் இணைந்து கிளாம்பாக்கம் ரயில்நிலைய திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

கிளாம்பாக்கம் ரயில்நிலையம்
சென்னை: சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி - சாலை மறியல் செய்த பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மேலும், வில்லிவாக்கத்தில் புதிய ரயில்வே முனையம் உருவாக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானங்கள் தொடங்கும்.

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com