கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவமழை – ஆர்ப்பரித்துக் கொட்டும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி

கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவமழை – ஆர்ப்பரித்துக் கொட்டும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி
கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவமழை – ஆர்ப்பரித்துக் கொட்டும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி

இடுக்கி மாவட்டத்தில் தொடர் கன மழையால் மேற்குத்தொடர்ச்சி மலையில் கொட்டும் 'அருவி!'தேனி மாவட்டம் கூடலூர் விவசாயிகள் மகிழ்ச்சி.

இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியால் தேனி மாவட்டம் கூடலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழையாக பெய்து வருகிறது. இதனால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள சக்குபள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லார்கோவில் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சுரங்கனார் காப்புக்காடு பகுதியில் உள்ள 'சுரங்கனார் நீர் வீழ்ச்சி' ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவி நீர் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஒட்டான்குளத்தை சென்றடைகிறது. இதனால் சுற்றுவட்டார விவசாய நிலங்களில் உள்ள பாசன கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது கூடலூர் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com