தென்னிந்திய மகளிர் வாலிபால் போட்டி: கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை எஸ்ஆர்எம் அணி

தென்னிந்திய மகளிர் வாலிபால் போட்டி: கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை எஸ்ஆர்எம் அணி
தென்னிந்திய மகளிர் வாலிபால் போட்டி: கோப்பையை தட்டித்தூக்கிய சென்னை எஸ்ஆர்எம் அணி

நெல்லையில் நடைபெற்ற 8 வது தென்னிந்திய மகளிர் வாலிபால் இறுதி போட்டியில் சென்னை ளுசுஆ அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி உள்விளையாட்டரங்கில் 8 வது தென்னிந்திய மகளிருக்கான வாலிபால் போட்டி கடந்த 8ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இதில், இறுதிப் போட்டிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த St.ஜோசப் அணியும், தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். அணியும் தகுதி பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியை நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எஸ்ஆர்எம் அணி முதல் சுற்றில் 23 : 25 என்ற புள்ளி கணக்கிலும், இரண்டாவது சுற்றில் 22 : 25 இந்த புள்ளி கணக்கிலும் St.ஜோசப் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்ஆர்.எம். அணிக்கு வெற்றி கோப்பையையும், 20 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com