கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு - நிரம்பி வழிந்த ரயில்கள், பேருந்துகள்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், நேற்றிரவு தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்தால் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு புதிய தலைமுறை

நேற்று இரவு நெல்லை ரயில் நிலையத்தில் சென்னை செல்வதற்காக ஏராளமானோர் ரயிலுக்காக காத்திருந்தனர். நெல்லையில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்புமுகநூல்

முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு ஏறினர். இருக்கைகள் கிடைக்காமல் பலரும் கழிவறை செல்லும் பாதை, படிக்கட்டுகளில் நின்றுக் கொண்டே பயணம் செய்தனர்.

பள்ளிகள் திறப்பு
குமரி: சோதனை சாவடியில் லஞ்சம் - வீடியோ வைரலான நிலையில் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

இதுபோன்று தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க இதுபோன்ற நேரங்களில் கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com