கீர்த்தனைகள் பாடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த கர்நாடக இசைப்பாடகி!

கீர்த்தனைகள் பாடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த கர்நாடக இசைப்பாடகி!

கீர்த்தனைகள் பாடி மாற்றுத்திறனாளி மாணவர்களை மகிழ்வித்த கர்நாடக இசைப்பாடகி!

மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி மாணவர்களிடையே அமர்ந்து கீர்த்தனைகள் பாடி பிரபல கர்நாடக இசைப்பாடகி சௌம்யா மகிழ்வித்தார். மாற்றுத் திறனாளி மாணவர்களும் இணைந்து பாடியதால் நெகிழ்ச்சி ஏற்பட்டது.

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34-வது ஆண்டு இசை விழா நேற்று நிறைவடைந்தது. இதன் நிறைவு நாளில் பிரபல கர்நாடக இசை பாடகி சௌம்யா கலந்துகொண்டு இசை ஆராதனை நடத்தினார்.

இந்நிலையில், மயிலாடுதுறை புதுத்தெருவில் உள்ள பாண்டுரெங்கன் பஜனை மடத்தில் இன்றுகாலை அவர் வழிபாடு நடத்தினார். பின்னர், பஜனை மடத்தின் அருகேயுள்ள மகா ஈஸ்வர் என்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி இருப்பதை கேள்வியுற்ற அவர், அந்த மாணவர்கள் அனைவரையும் பஜனை மடத்துக்கு வரவழைத்து, அவர்களுடன் அமர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு கீர்த்தனைகளை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

பாடுவது யார் என்று கூட அறியாத நிலையில், மன வளர்ச்சி குன்றிய அந்த மாணவர்களும் பிரபல கர்நாடக இசை பாடகியுடன் இணைந்து பாடியது கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் முடிவில், மகா ஈஸ்வர் பள்ளியின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்கள் பாடகி சௌம்யாவுக்கு நினைவுப் பரிசை வழங்கினர். மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்து பாடியது மனநிறைவு தருவதாக பாடகி சௌம்யா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com