'மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவு' - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவு' - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்
'மகன் திருமணத்துக்கு ரூ.3 கோடி செலவு' - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்

தனது மகன் திருமனத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியை குற்றம் சாட்டியும், மதுரையைச் சேர்ந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றதாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசும்போது... தற்பொழுது நடைபெறுவதுதான் சமூக நீதி திராவிட மாடல் ஆட்சி. நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும்.

தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளது குறித்து விளக்கமளித்த அமைச்சர்...

தனது மகன் திருமணத்தில் ஏழை எளிய மக்கள் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் சமமாக அமர வைத்து சாப்பாடு கொடுத்தேன். 50 ஆயிரம் பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்துள்ளேன்

30 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக கூறும் எடப்பாடி பழனிசாமி கணக்கர் வேலை பார்த்தாரா. எனது மகன் திருமணத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன். கரும்பு வாழை கட்டியது ஆடம்பரமா?

திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் வேண்டுமென்றால் திருமண செலவு குறித்து ஆய்வு நடத்தி கொள்ளலாம். அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் உள்ளபோது திருமணத்தை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்காக எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார். முதல்வர் பதவி பெற என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும் பத்திரப்பதிவுத் துறையில் கடந்த 16 மாதங்களில் 100 மடங்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு வணிகவரித் துறையில் ஆய்வு நடத்தியதுண்டா, அதிமுக ஆட்சியில் இரு துறைகளிலும் கவனம் செலுத்தவில்லை, வருவாய் ஈட்டவில்லை. அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பத்திரப்பதிவு வணிகவரித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் விவாதம் செய்ய தயார். எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது. எத்தனை லட்சம் கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி இதை இல்லை என மறுக்க முடியுமா? அதிகாரிகளை லஞ்சம் வாங்க பயன்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி அமைச்சராகும் முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார், பொதுச் செயலாளர் பதவியை பெற எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார். அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்பது எங்களுக்குத் தெரியும்

முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்துவிட்டு மிகப்பெரிய பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. அவருடைய தகுதிக்கு ஏற்ப பொறுப்புடனும் ஆதாரப்பூர்வமாகவும் பேச வேண்டும். 16 மாதங்களில் அனைத்து துறைகளிலும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் வைத்துச் சென்ற 6 லட்சம் கோடி கடனை சமாளித்தி 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கும் முதல்வர் இந்தியாவின் முன்னோடியாக இருக்கிறார். அவரை பார்த்து பொம்மை முதல்வர் என கூறுவதா? முதல்வரை பேச யாருக்கும் தகுதி கிடையாது.

அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் நாங்கள் என்ன செய்ய துண்டு பேப்பரில் எழுதி கொடுப்பதை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செய்துள்ளோம் என்பதை பட்டியலிட தயராக உள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com