\
“என் மகன் சொத்துக்களை அபகரித்துவிட்டான்” - தூத்துக்குடி ஆட்சியரிடம் 77 வயது மூதாட்டி மனு

“என் மகன் சொத்துக்களை அபகரித்துவிட்டான்” - தூத்துக்குடி ஆட்சியரிடம் 77 வயது மூதாட்டி மனு

“என் மகன் சொத்துக்களை அபகரித்துவிட்டான்” - தூத்துக்குடி ஆட்சியரிடம் 77 வயது மூதாட்டி மனு
Published on

தூத்துக்குடியில் ஏமாற்றி அபகரித்த சொத்துக்களை மகனிடம் இருந்து மீட்டுத்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் 77 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மேற்கு சங்கரப்பேரி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த கருப்பசாமி எனபவரின் மனைவி மோட்சம் (77). இவருக்கு ஒரு மகனும் 5 மகள்களும் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவரது மகன் ராமராஜ் என்பவர், மோட்சத்தின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது.

இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மகனிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மோட்சம் மனு அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com