குடிக்க பணம் தர மறுத்த தந்தையை குத்திக் கொன்ற மகன்..!

குடிக்க பணம் தர மறுத்த தந்தையை குத்திக் கொன்ற மகன்..!

குடிக்க பணம் தர மறுத்த தந்தையை குத்திக் கொன்ற மகன்..!
Published on

ராசிபுரம் அடுத்த கல்குறிச்சியில் குடும்பத்தகராறு மற்றும் குடிக்க பணம் தராத தந்தையை குத்திகொன்ற மகன் கைது
 செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி தேவேந்தர்காலணியை சேர்ந்தவர் பொடியன்(எ) பெரியசாமி. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதை காரணமாக அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டு மனைவி குழந்தைகளுடன் மணிமேகலை தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் பெரியசாமி மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் டிரைவர் பெரியசாமி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியசாமியின் மகன் அஜித்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடிக்கடி தந்தை குடும்பத்தகராறில் ஈடுபட்டு வந்ததாலும் மேலும் நேற்று இரவு குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும் அதற்கு தரமறுத்ததால் ஆத்திரத்தில் குத்தி கொன்றதாக அஜித் போலீசாரின் விசாரணையில் தெரிவித்தார். அதனையடுத்து காவல்துறையினர் அஜித்தை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக யாரேனும் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com