போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை; போதை இளைஞரால் வெளியேறிய போலீஸ்.. நடந்தது என்ன?

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை; போதை இளைஞரால் வெளியேறிய போலீஸ்.. நடந்தது என்ன?

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை; போதை இளைஞரால் வெளியேறிய போலீஸ்.. நடந்தது என்ன?
Published on

குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற இளைஞரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை அந்த இளைஞர் தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்திய சில இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் சென்ற போதை இளைஞர் புகார் அளிக்கச் சென்றவரை அங்கிருந்து விரட்டியடித்ததோடு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து காவலர்கள், காவல் நிலையத்தில் இருந்து வெளியேறிய நிலையில், காவல் நிலையத்திற்குள் சுற்றி வந்த அந்த இளைஞரை அங்கு திரண்ட சில இளைஞர்கள் கைகளை கட்டி அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அந்த இளைஞர் அடம் பிடித்தப்படி அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த அவரது தாய் தந்தையர் அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அந்த இளைஞர் தனது பெற்றோரை காலால் மிதித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தந்தையும் மகனும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் அங்கு வந்த சிலர் உதவியுடன் பெற்றோர், அந்த போதை இளைஞரை காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அந்த போதை இளைஞர் காவல் நிலையத்திற்குள் பெற்றோரை சரமாரியாக தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com