\
தாயின் இறுதிச்சடங்குக்கு பிச்சையெடுத்த மகன்கள்

தாயின் இறுதிச்சடங்குக்கு பிச்சையெடுத்த மகன்கள்

தாயின் இறுதிச்சடங்குக்கு பிச்சையெடுத்த மகன்கள்
Published on

தாயின் இறுதிச்சடங்குக்கு பணமில்லாமல் பிள்ளைகள் பிச்சை எடுத்த நிகழ்வு வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு மோகன்ராஜ் என்ற 13 வயது மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில், இந்த இரண்டு மகன்களும் மருத்துவமனையில் தாயுடன் இருந்து கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். இந்த இரண்டு மகன்களுக்கு உறவுகளும் ஆதரவுக்கரம் நீட்டாததால், தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லவும், இறுதிச்சடங்கிற்கு தேவையான பணத்திற்காகவும் மூத்த மகன் மோகன்ராஜ் மருத்துவமனை முழுவதும் உள்ள நோயாளிகளிடம் பிச்சை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கல்நெஞ்சம் கொண்டோரையும் கலங்க வைத்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com