\
முதியவர் கொலை : கூட்டாளியை வைத்து கொலை செய்துவிட்டு மகன் - மருமகள் நாடகமாடியது அம்பலம்

முதியவர் கொலை : கூட்டாளியை வைத்து கொலை செய்துவிட்டு மகன் - மருமகள் நாடகமாடியது அம்பலம்

முதியவர் கொலை : கூட்டாளியை வைத்து கொலை செய்துவிட்டு மகன் - மருமகள் நாடகமாடியது அம்பலம்
Published on

மதுரை அருகே முதியவரை கொலை செய்து விட்டு மகன் மற்றும் மருமகள் நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர், அவரது தோட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவரின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தருமா மற்றும் கூட்டாளியான அய்யனார் என மூவரும் இணைந்து சொத்திற்காக முதியவரை கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இந்த மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com