தமிழ்நாடு
தேர்தல் தோல்வியால் ஆத்திரம்... குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கிய ஆதரவாளர்கள்?
தேர்தல் தோல்வியால் ஆத்திரம்... குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கிய ஆதரவாளர்கள்?
ஆலங்குடி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தோல்வியடைந்தததால் அவரது ஆதரவாளர்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை அடித்து உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு சிங்காரம் என்பவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிங்காரம் ஆதரவாளர்கள், அந்த கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளதாக கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அறந்தாங்கி ஆலங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.