ஆளுநர் ஆர்.என்.ரவிமுகநூல்
தமிழ்நாடு
”பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி!
சிதம்பரத்தில் சீர்திருத்தவாதி சுவாமி சகஜானந்தாவின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது
தமிழகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சீர்திருத்தவாதி சுவாமி சகஜானந்தாவின் 135 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர், அரசியல் காரணங்களுக்காக பட்டியல் சமூக மக்கள் 200 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் என்றும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் பட்டியல் சமூக ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர முடியவில்லை என்றும் தெரிவித்தார். பிரிட்டிஷார் ஆளவந்த போது நாம் எப்படி இருந்தோம் என்றும் அதற்கு முன்பு எப்படி இருந்தோம் என நம்மில் பல பேருக்கு தெரியாமல் உள்ளது என்றும் அதனை நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பேசினார்.