‘நகையை கழட்டி பையில வையுங்க’  - காவலர் போல் நடித்துக் கொள்ளை!

‘நகையை கழட்டி பையில வையுங்க’ - காவலர் போல் நடித்துக் கொள்ளை!

‘நகையை கழட்டி பையில வையுங்க’ - காவலர் போல் நடித்துக் கொள்ளை!
Published on

சென்னையில் காவலர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் பணத்தை பறித்துச்சென்றவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

சென்னை, மணலியில் உள்ள சாத்துமா நகரில் வசிப்பவர் மோகனா (72). இவர் பணி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் வைப்புநிதி கணக்கு தொடர்பாக, ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ராயப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். 

அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள், தாங்கள் காவலர்கள் என்று கூறி மோகனாவை அழைத்துள்ளனர். மோகனாவிடம் பேசிய அவர்கள், ‘இந்தப் பகுதியில் நகை திருட்டு அதிகம். இந்த மாதிரி எல்லாம் கழுத்துல நகையை போடாதீங்க. நகையை கழட்டி பையில வையுங்க’ என்று கூறியுள்ளனர். பயந்துபோன மோகனா நகையை கழட்டியுள்ளார். அந்த இரண்டு நபர்களும் நகையை வாங்கி அவர்களே பையில் வைத்துள்ளனர். 

பின்னர், சட்டென நகையை தூக்கிக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் ஓடியுள்ளனர். மோகனா கத்திக் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அவர்கள் கண்ணுக்கெட்டாத தொலைவிற்கு சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோகனா கூறியுள்ள அடையாளங்களை வைத்து காவலர்கள் அந்த இரண்டு திருடன்களையும் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com