\
தண்டவாளத்தில் மது அருந்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்

தண்டவாளத்தில் மது அருந்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்

தண்டவாளத்தில் மது அருந்துவதால் விபத்து ஏற்படும் அபாயம்
Published on

சேலம் ரயில் தண்டவாள ப‌குதி மதுப்பிரியர்களின் தற்காலிக மதுக்கூடமாக மாறியுள்ளது. 

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள இரு மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள், அதனை அ‌ருகில் உள்ள ரயில்வே‌ பகுதிக்கு எடுத்துச் சென்று, தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டுச் செல்கின்றனர். இந்தப் பகுதி சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ளது.  

இவ்வாறு மது அருந்துபவர்களில் சிலர், உச்சகட்ட போதையில் தண்டவாளத்தின் அருகே மயங்கி விழுந்துவிடுவதால் விபத்து நேரும் அபாயம் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பொது இடங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை, அபராதத்தை மட்டும் வசூலித்து விட்டு விடாமல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com